சென்னை - சாலிமர் இடையே இன்று கோடை கால சிறப்பு ரெயில்

கோடை கால சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு சிறிது நேரத்தில் தொடங்க இருக்கிறது
சென்னை - சாலிமர் இடையே இன்று கோடை கால சிறப்பு ரெயில்
Published on

சென்னை,

எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் - மேற்கு வங்காள மாநிலம் சாலிமர் இடையே கோடை கால சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரலில் இருந்து இன்று (20-ந் தேதி) இரவு 7.45 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 06097), 3-வது நாள் இரவு 12.15 மணிக்கு சாலிமரை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் சாலிமரில் இருந்து 22-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06098) மறுநாள் காலை 9.25 மணிக்கு சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தை வந்தடையும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு சிறிது நேரத்தில் தொடங்க இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com