கோடை விடுமுறை நிறைவு - சென்னைக்கு வரும் விமான கட்டணம் உயர்வு

ரெயில் மற்றும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி காணப்பட்டு வருகிறது.
விமானம்
Published on

சென்னை,

கோடை விடுமுறை முடிவடைவதால் சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். ரெயில் மற்றும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி காணப்பட்டு வருகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்னையை அடைய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் விமானம் மூலம் சென்னை திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. திருவனந்தபுரம், கொச்சி ஆகிய விமான நிலையங்களில் இருந்தும் சென்னை வரும் விமான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட விமான கட்டணம்

இதன்படி உயர்த்தப்பட்ட கட்டண விவரங்கள் பின்வருமாறு:-

மதுரையில் இருந்து சென்னை வர விமான கட்டணம் ரூ.17,303

திருச்சியில் இருந்து சென்னை வர விமான கட்டணம் ரூ.14,404

கோவையில் இருந்து சென்னை வர விமான கட்டணம் ரூ.16,504

தூத்துக்குடியில் இருந்து சென்னை வர விமான கட்டணம் ரூ.17,272

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com