கோடை விடுமுறை: போத்தனூரில் இருந்து மேற்கு வங்காளத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
கோடை விடுமுறை: போத்தனூரில் இருந்து மேற்கு வங்காளத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கம்
Published on

சென்னை,

கோடை விடுமுறையையொட்டி பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் போத்தனூர்- மேற்கு வங்க மாநிலம் காரக்பூர்- சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப் பட உள்ளன.

இதுதொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போத்தனூர்-காரக்பூர் சிறப்பு ரெயில் (எண்: 06011) இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 6.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 5.15 மணிக்கு காரக்பூர் ரெயில் நிலையத்தை சென்றடையும். காரக்பூர்-சென்னை கடற்கரை சிறப்பு ரெயில் (எண்: 06012) நாளை (புதன்கிழமை) இரவு 8 மணிக்கு கரரக்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 11.30 மணிக்கு சென்னை கடற்கரையை சென்றடையும்.

போத்தனூர்-காரக்பூர் சிறப்பு ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூர், ஒங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, துவ்வாடா, விஜயநகரம், பலசா, குர்தா சாலை, புவனேஷ்வர், கட்டாக், பத்ரக் மற்றும் பாலசோர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com