கோடை விடுமுறை: திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்

திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக எர்ணாகுளம்-முசாபர்பூர் (பீகார் மாநிலம் ) இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
கோடை விடுமுறை: திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்
Published on

திருப்பூர்,

கோடை விடுமுறையை முன்னிட்டும், அதிகரித்து வரும் பயணி களின் தேவையை கருத்தில் கொண்டும், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக எர்ணாகுளம்-முசாபர்பூர் (பீகார் மாநிலம் ) இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளம்-முசாபர்பூர் (வண்டி எண்.06085) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 10, 17 மற்றும் 24-ந்தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில்) எர்ணாகுளத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, திங்கட்கிழமைகளில் காலை 7.30 மணிக்கு முசாபர்பூரை சென்றடையும்.

முசாபர்பூர்-எர்ணாகுளம் (06086) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 13, 20 மற்றும் 27-ந்தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) முசாபர்பூரில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, வியாழக் கிழமைகளில் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளத்தை சென்ற டையும்.மேற்கண்ட தகவலை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com