கோடை விடுமுறை: ஈரோடு வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்

இதனால் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கோடை விடுமுறை: ஈரோடு வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்
Published on

ஈரோடு,

கோடை விடுமுறையையொட்டி ரெயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி போத்தனூரில் இருந்து ஈரோடு வழியாக மேற்கு வங்க மாநிலம் காரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06065) நாளை (சனிக்கிழமை), 30, 6-ந்தேதிகளில் இரவு 11 மணிக்கு இயக்கப்படுகிறது.

மேலும் மேற்கு வங்க மாநிலம் காரக்பூரில் இருந்து ஈரோட்டுக்கு ரெயில் (வண்டி எண்-06066) 25, 1, 8-ந்தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்படுகிறது. இந்த தகவல் சேலம் கோட்ட ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com