சுந்தரேஸ்வரர், கார்த்தியாயினி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

திருவீழிமிழலை வீழிநாதசுவாமி கோவிலில் சுந்தரேஸ்வரர், கார்த்தியாயினி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
சுந்தரேஸ்வரர், கார்த்தியாயினி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
Published on

குடவாசல்:

குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலை வீழிநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று வைகாசி மாத மக நட்சத்திரத்தையொட்டி கல்யாண சுந்தரேஸ்வரர், கார்த்தியாயினி அம்மனுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் 1,000 தாமரை பூக்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், மக நட்சத்திர வழிபாட்டு குழு சீதாராமன் ஆகியோர் செய்து இருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com