சூரியகாந்தி குவிண்டால் ரூ.4,200-க்கு விற்பனை

விருதுநகர் வேளாண் விற்பனை குழுவில் சூரியகாந்தி குவிண்டால் ரூ.4,200-க்கு விற்பனையானது.
சூரியகாந்தி குவிண்டால் ரூ.4,200-க்கு விற்பனை
Published on

விருதுநகர் வேளாண் விற்பனை குழுவில் சூரியகாந்தி குவிண்டால் ரூ.4,200-க்கு விற்பனையானது.

சூரியகாந்தி

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் விற்பனை குழுவில் செயல்பட்டு வரும் விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூட தேசிய மின்னணு வேளாண் விற்பனைச்சந்தை உள்ளது.

இங்கு தாதும்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவகுமார் என்ற விவசாயி தனது விளைபொருளான சூரியகாந்தியை மறைமுக ஏலத்தின் மூலம் குவிண்டால் ரூ.4,200 வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 420-க்கு விற்பனை செய்து உள்ளார். அதிகபட்ச விலையாக ரூ.4,200 ஆகவும், குறைந்தபட்ச விலையாக ரூ.4,100-க்கும் ஏலம் கேட்கப்பட்டது.

சரியான எடை

இதையடுத்து விவசாயிகள் வங்கி கணக்குக்கு உடனடியாக பணம் வரவு வைக்கப்பட்டது. இந்த மறைமுக ஏலத்தில் 3 வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து விவசாயி சிவகுமார் கூறுகையில், தேசிய மின்னணு வேளாண் சந்தை மூலம் விளை பொருள் விற்பனை செய்வதால் சரியான எடை மற்றும் தரகு கமிஷன் எதுவும் இன்றி நல்ல விலை கிடைத்தது என்றார்.

ஆதலால் விவசாய பெருமக்கள் அனைவரும் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தில் தங்களது வேளாண் விளை பொருட்களை நல்லவிலைக்கு விற்பனை செய்து பயனடையுமாறு விற்பனைக்குழு செயலாளர் வேலுச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com