சிவலிங்கத்தின் மீது விழுந்த சூரியஒளி

கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது விழுந்த சூரியஒளி விழுந்தது.
சிவலிங்கத்தின் மீது விழுந்த சூரியஒளி
Published on

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள அரியாண்டிபுரம் கிராமத்தில் மாதேஸ்வரர் மாதவ ஜோதி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வாரு ஆண்டும் ஆவணி மாதம் 15-ந்தேதி முதல் 3 நாட்களும், பங்குனி மாதம் 20-ந்தேதியும் சூரியஒளி சிவலிங்கம் மீது விழும். அதன்படி கோவிலில் சிவலிங்கம் மீது சூரியஒளி விழுந்தது. இதை பார்த்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமிக்கு கும்பிட்டனர். இந்த நிகழ்வயொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

X

Daily Thanthi
www.dailythanthi.com