'சூப்பர் எல் நினோ' தாக்குதல்: நீலகிரியில் தேயிலை சாகுபடி பாதிப்பு

நீலகிரியில் சராசரி வெப்பநிலை 0.50 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது.
'சூப்பர் எல் நினோ' தாக்குதல்: நீலகிரியில் தேயிலை சாகுபடி பாதிப்பு
Published on

ஊட்டி,

'சூப்பர் எல் நினோ' தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம், நீலகிரியில் தேயிலை சாகுபடியை பாதிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வறிக்கையின் மூலம் வெளிவந்துள்ளது. இதுகுறித்து, யுபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேயிலை செடிகளை நேரடியாக பாதிக்கும்

தேயிலை செடிகளில் இருந்து இளம் தளிர்கள் தொடர்ந்து பறிக்கப்படுவதால், 'சூப்பர் எல் நினோ'வால் அதிகரிக்கும் வெப்பநிலை, மண்ணின் ஈரப்பதம், காற்றின் ஈரப்பதம், மகசூல் மற்றும் தேயிலையின் தரத்தை நேரடியாக பாதிக்கின்றன. நீலகிரியில் சராசரி வெப்பநிலை 0.50 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. மேலும், பனிப்பொழிவு, ஆலங்கட்டி மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தேயிலை செடிகளின் வளர்ச்சியும், மகசூலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தாக்கத்தை சமாளிப்பது எப்படி?

'சூப்பர் எல் நினோ' தாக்கத்தை சமாளிக்க, கிளிரிசிடியா போன்ற நிழல் தரும் மரங்களை வளர்க்க வேண்டும். மேலும், மண் - நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். வறட்சியை தாங்கும் சாகுபடி முறைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com