பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது..!
Published on

சென்னை,

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. பொதுப்பிரிவில் விண்ணப்பித்துள்ள 13,650 பேரில் 13,244 மாணவர்கள் துணை கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள 4,585 மாணவர்களில் 4,466 பேர் துணை கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவில் விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் நாளை மாலை 5 மணி வரை விருப்பக் கல்லூரிகளை பதிவு செய்யலாம்.

இன்று 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரையில் இணையவழியில் துணை கலந்தாய்வு நடத்தப்படும். அதன் பின்னா பட்டியலினம், அருந்ததியா பிரிவில் நிரம்பாமல் காலியாக உள்ள இடங்களில் எஸ்.சி. பிரிவினரை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப். 10, 11 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com