என்ஜினீயரிங் படிப்புக்கான துணை கலந்தாய்வு

என்ஜினீயரிங் படிப்புக்கான 2ம் சுற்று கலந்தாய்வில் 40,299 மாணவர்களுக்கு நிரந்தர ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு சேர்க்கை பெற்று வருகின்றது.
என்ஜினீயரிங் படிப்புக்கான துணை கலந்தாய்வு
Published on

பிளஸ்-2 துணைத் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவ- மாணவிகள் மற்றும் பொதுக்கலந்தாய்வில் விண்ணப்பிக்காதவர்கள் வருகிற 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

என்ஜினீயரிங் படிப்புக்கான இதுவரை நடந்து முடிந்த சிறப்பு கலந்தாய்வு மற்றும் முதல் சுற்று கலந்தாய்வில், 28 ஆயிரத்து 979 மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப் பட்டு சேர்க்கை பெற்று வருகின்றனர். பி.ஆர்க். கலந்தாய்வில் பொது பிரிவில் 622 பேரும் மற்றும் அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 40 பேரும் ஒதுக்கீட்டு ஆணைகள் பெற்றுள்ளனர். அவ்வாறு இறுதியாக ஒதுக்கப்பட்ட இடங்கள் www.tneaonline.org என்ற இணையத ளத்தில் வெளிப்படைத்தன்மையுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 2-வது சுற்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 60 ஆயிரத்து 508 ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட் டுள்ளன. 2-வது சுற்று கலந்தாய்வு செயல்பாடுகள் 17-ந்தேதி வரை நடைபெற இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து 3-வது சுற்று கலந்தாய்வு தொடங்கி நடைபெறும்.

அதன் தொடர்ச்சியாக துணைக்கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதற்காக பிளஸ்-2 துணைத் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவ- மாணவிகள் மற்றும் பொதுக்கலந்தாய்வில் விண்ணப்பிக்காதவர்கள் வருகிற 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கான துணைக்கலந்தாய்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

கலந்தாய்வு மற்றும் ஒதுக்கீடு பற்றிய விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் உள்ள 110 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்களை தொடர்பு கொண்டோ அல்லது நேரில் சென்றோ தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அதன் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணாக்கர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தங்கள் கலந்தாய்வு தொடர்பான சந்தேகங்களையும் மற்றும் ஒதுக்கீட்டாணை பற்றிய விளக்கங்கள் பெற வேண்டி பத்து இணைப்புகளுடன் கூடிய அழைப்பு மையம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அழைப்பு எண்: 1800-425-0110. இது தொடர்பாக, மாணாக்கர்கள் tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com