விபத்தில் கால்கள் செயலிழந்தவருக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

விபத்தில் கால்கள் செயலிழந்தவருக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
விபத்தில் கால்கள் செயலிழந்தவருக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
Published on

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விபத்தின் காரணமாக தண்டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு கால்கள் செயலிழந்த கடவூர் வட்டம், கருங்கல்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். இந்த மருத்துவ உபகரணங்களில் சுகாதாரமாக இருப்பதற்கு ஸ்டெராய்டு வாட்டர் -10, தினமும் பயன்படுத்தப்படும் மாத்திரைகள், மலச்சிக்கல் ஏற்படுத்தாமல் தடுக்கும் வகையில் 200 மாத்திரைகள், படுக்கையினால் ஏற்படுத்தும் புண்களை குணப்படுத்தும் ஜெல்கள் 10, உடலில் நீர்சத்து குறையாமல் இருப்பதற்கு 10 தடுப்பூசி மருந்து, சிறுநீர் கழிக்க நீர் வழி டியூப், சிறுநீர் சேமிப்பு பை, படுக்கை விரிப்பு ரப்பர் வடிவில் 10 எண்ணிக்கையும், புண்களுக்கு கட்டு கட்டும் துணி 100 உள்ளிட்ட 13 வகையான பாதுகாப்பு மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com