எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வீட்டு முன்பாக குவியும் ஆதரவாளர்கள்

அதிமுகவில் உள்ள மோதல் வெட்ட வெளிச்சமாக வெடித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அவரது வீட்டு முன்பு ஆதரவாளர்கள் குவிந்து வருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வீட்டு முன்பாக குவியும் ஆதரவாளர்கள்
Published on

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அதிமுக இழந்து இருப்பதால், அதிமுகவில் கடும் குழப்பமும், அதிருப்தி குரல்களும் எழுந்துள்ளன. ஒட்டுமொத்தமாக உள்ள 47 எம்எல்ஏக்களில் 30 பேர் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையிலும், எஞ்சிய 17 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் உள்ளனர்.

இதனால் அதிமுக சட்டசபை குழு தலைவராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற குழப்பம் நிலவியது. இன்று சட்டசபை கூட்டத்தொடரின் போது, அதிமுக எம்எல்ஏக்களில் 17 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுத்துள்ளதாக கூறி அதற்கான கடிதத்தை தற்காலிக சபாநாயகரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை சந்தித்து எஸ்.பி. வேலுமணி கட்சியின் சட்டசபைக் குழு தலைவராக செயல்படுவார் என்று கூறி அதற்கான ஆதரவு கடிதங்களை அளித்தனர்.

அதிமுகவில் உள்ள மோதல் வெட்ட வெளிச்சமாக வெடித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அவரது வீட்டு முன்பு ஆதரவாளர்கள் குவிந்து வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு நாளை பிறந்த நாள் என்பதால், அவருக்கு வாழ்த்து கூறவும் குவிந்து வருவதாக சொல்லப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com