சென்னை ஐகோர்ட்டிற்கு 8 புதிய நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை

5 வழக்கறிஞர்கள் மற்றும் 3 நீதித்துறை அலுவலர்களை நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
Image Courtesy : ANI
Image Courtesy : ANI
Published on

புதுடெல்லி,

சென்னை ஐகோர்ட்டிற்கு 8 புதிய நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதன்படி 5 வழக்கறிஞர்கள் மற்றும் 3 நீதித்துறை அலுவலர்களை நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 17-ந்தேதி நடந்த கொலீஜியம் கூட்டத்தில், பரிந்துரை தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து புதிய நீதிபதிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கொலீஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு;-

பரிந்துரை செய்யப்பட்ட வழக்கறிஞர்கள்:

1. வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன்

2. லெஷ்மண சந்திர விக்டோரியா கவுரி

3. பிள்ளைப்பாக்கம் பாகுகுடும்பி பாலாஜி

4. ராமசாமி நீலகண்டன்

5. கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன்

பரிந்துரை செய்யப்பட்ட நீதித்துறை அலுவலர்கள்:

1. பெரியசாமி வடமலை

2. ராமச்சந்திரன் கலைமதி

3. கோவிந்தராஜன் திலகவதி

சென்னை ஐகோர்டிற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் மொத்த எண்ணிக்கை 75 ஆகும். தற்போது 52 நீதிபதிகள் உள்ளனர். புதிய பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு, நீதிபதிகளை நியமிக்கும் பட்சத்தில், ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com