மாவட்ட கோர்ட்டுகளில் 5 ஆயிரம் நீதிபதி பணியிடங்கள் காலி - சுப்ரீம் கோர்ட்டில் தகவல்

கோப்புப்படம்
ஒப்புதல் அளிக்கப்பட்ட மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களில், சுமார் 5 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
வக்கீல் தொழிலில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்று நீதிபதி ஆனவர்களை மாவட்ட நீதிபதிகளுக்கான காலியிடங்களில் வக்கீல்களுக்கான ஒதுக்கீட்டில் நியமிக்கலாமா என்ற அரசியல் சாசன கேள்வி குறித்து சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.
இவ்வழக்கு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று 2-வது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சில மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் மேனகா குருசாமி, மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி வாதிட்டார்.
ஒப்புதல் அளிக்கப்பட்ட 25 ஆயிரத்து 870 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களில், சுமார் 5 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அவர் கூறினார்.
Related Tags :
Next Story






