காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: காவல் ஆணையருடன் முதலமைச்சர் ஆலோசனை

காவிரி நீர் தீர்ப்பு எதிரொலியாக தமிழக விவசாயிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர். இதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக காவல் ஆணையருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். #EdappadiPalaniswami #CauveryWater #CauveryVerdict
காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: காவல் ஆணையருடன் முதலமைச்சர் ஆலோசனை
Published on

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 177. 25 டிஎம்சி நீரை ஒதுக்கிட்டு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. காவிரி நடுவர் மன்றம் வழங்கியதிலிருந்து கர்நாடகாவுக்கு 14.75 டிஎம்சி நீர் கூடுதலாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீர் இருப்பு உள்ளது, கர்நாடகாவில் குடிநீர் தேவை அதிகம் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.

(2007 ஆம் ஆண்டு நடுவர் மன்றம் 192 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. இது 14. 75 டிஎம்சி தண்ணீர் குறைவு, தமிழகத்திற்கான காவிரி நீரை 132 டி.எம்.சி-யாக குறைக்க கர்நாடகம் மேல்முறையீடு செய்து இருந்தது)

இந்த தீர்ப்பால் கர்நாகாவில் மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் விதித்த தீர்ப்புக்கு கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் வரவேற்பு தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் பெங்களூருவின் தண்ணீர் தட்டுப்பாடு பெருமளவில் குறையும் என கூறப்படுகிறது.

கூடுதல் நீரை கர்நாடகத்திற்கு ஒதுக்கிய சுப்ரீம் கோர்ட்டிற்கு கர்நாடக சட்ட கவுன்சில் நன்றி தெரிவித்து உள்ளது. காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக கர்நாட்க முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.

காவிரி வழக்கின் இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.தமிழகத்தை இரண்டாம் தர குடிமக்களாக மத்திய அரசு பார்க்கக் கூடாது என தமிழக விவசாயிகள் கூறி உள்ளனர்.

இதனால் தமிழக விவசாயிகள் மிகுந்த ஏமாற்றமுத்துடன் கவலையில் உள்ளனர். இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் காவல் ஆணையர் ஆலோசனை த்திநடனார். காவிரி தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை குறித்து ஆலோசனை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com