மழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் கணக்கெடுப்பு பணி

திருத்துறைப்பூண்டி அருகே மழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் கணக்கெடுப்பு பணி நடந்தது.
மழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் கணக்கெடுப்பு பணி
Published on

ஆலத்தம்பாடி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் பருவம் தவறி பெய்த மழையால் அப்பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

அதன்படி திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்கொடி மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆலத்தம்பாடி வருவாய் சரகம் கச்சனம், கோமல் ஆகிய கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது கணக்கெடுப்பு பணியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் யாராவது விடுபட்டிருந்தால் அவர்கள் தங்களது சாகுபடி விவரங்களை அந்தந்த பகுதி வேளாண்மை உதவி அலுவலர் அல்லது கிராம நிர்வாக அலுவலருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் கூறினர். ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர் ராணி, வேளாண்மை உதவி அலுவலர் ஜோதி கணேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கோகிலன், லதா ஆகியோர் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com