சந்தேகத்தில் மனைவி-மாமியார்-கடப்பாரையால் அடித்துக் கொலை

மனைவியையும் மாமியாரையும் கடப்பாரையால் அடித்துக் கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சந்தேகத்தில் மனைவி-மாமியார்-கடப்பாரையால் அடித்துக் கொலை
Published on

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே, கட்சிக்குச்சான் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் குடிபழக்கத்திற்கு அடிமையானவர். இவர் மனைவி மகாலட்சுமி மீது நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மகாலட்சுமி ந்கணவனிடம் கோபித்துக் கொண்டு முருக்கம்பட்டியில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்று விட்டார்.

மனைவி மகாலட்சுமியை தேடி மாமியார் வீட்டுக்கு குடிபோதையில் சென்ற முருகன், மனைவியை அனுப்புமாறு மாமியாரிடம் தகராறு செய்து உள்ளார். இல்லையென்றால் தான் வாங்கிப்போட்ட நகைகளை திருப்பித் தருமாறும் தகராறு செய்துள்ளார்.

அவரை அமைதிப்படுத்தி மாமியாரும், மனைவியும் வீட்டிலேயே தங்க வைத்துள்ளனர். குடிபோதையிலும் சந்தேக வெறியிலும் இருந்த முருகன், நள்ளிரவில் மாமியார்-, மனைவியையும் வீட்டில் கிடந்த கடப்பாரையால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com