கூட்டுறவு சங்க பணியாளர் பணி இடைநீக்கம்

கூட்டுறவு சங்க பணியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கூட்டுறவு சங்க பணியாளர் பணி இடைநீக்கம்
Published on

தலைவாசல்,

தலைவாசலை அடுத்த தேவியாக்குறிச்சி ஊராட்சி தலைவராக அமுதா பதவி வகித்து வருகிறார். இவருடைய கணவர் ஜெயக்குமார் தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முதல் நிலை எழுத்தராக பணி புரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் ஊராட்சியில் ஒப்பந்த பணி மேற்கொள்ளும் காண்டிராக்டர் செந்தில்குமாரிடம் ஒப்பந்த பணிக்கு ரூ.55 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஊராட்சி செயலாளர் சின்னசாமியை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்ட நிலையில், தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முதல் நிலை எழுத்தர் ஜெயக்குமாரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com