நடத்தையில் சந்தேகம் - மனைவியை வெட்டி கொன்ற கணவன்

விழுப்புரம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
நடத்தையில் சந்தேகம் - மனைவியை வெட்டி கொன்ற கணவன்
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே சிங்கனூரை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி செல்வி (வயது 55). ஏழுமலை தனது மனைவியன் நடத்தையில் சந்தேகப்பட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று ஆத்திரம் அடைந்த ஏழுமலை கொடுவா கத்தியை கொண்டு மனைவி செல்வியை சரமாறியாக வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்த போலீசார் ஏழுமலை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன் மனைவியை கொலைசெய்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com