காவலர்களுக்கான நீச்சல் போட்டி - காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்

சென்னையில் காவலர்களுக்கான இரண்டு நாள் நீச்சல் போட்டியை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
காவலர்களுக்கான நீச்சல் போட்டி - காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

61-வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி, சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் பயிற்சி கூடத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த நீச்சல் போட்டியை சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டினார். அதனை தொடர்ந்து பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், போட்டியில் வெற்றி தோல்வி முக்கியம் அல்ல என்றும் பங்கேற்பது அவசியம் என்றும் அறிவுறுத்தினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com