நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இரும்பு தடுப்புகள் அமைப்பு

தீக்குளிப்பு முயற்சி சம்பவம் எதிரொலியாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இரும்பு தடுப்புகள் அமைப்பு
Published on

தீக்குளிப்பு முயற்சி சம்பவம் எதிரொலியாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

தீக்குளிப்பு முயற்சி

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து கோரிக்கை மனுக்கள் கொடுக்கின்றனர்.

அப்போது சிலர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

இதேபோல் மற்ற நாட்களில் மனு கொடுக்க வருபவர்களிலும் சிலர் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுகின்றனர்.

இதையடுத்து நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டு உள்ளார்.

இரும்பு தடுப்புகள்

ஏற்கனவே கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் வலது புறத்தில் 100 அடி தாலைவுக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது இடதுபுறமும் 100 அடி தொலைவுக்கு இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன.

கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வருபவர்களை வாசலில் முழு சோதனை நடத்திய பிறகே போலீசார் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் நாள் அன்று கலெக்டர் அலுவலகத்தில் ஒரு உதவி போலீஸ் கமிஷனர், 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடவும், துணை போலீஸ் கமிஷனர் அடிக்கடி வந்து ஆய்வு செய்யவும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் அனைத்து நாட்களிலும் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 10 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com