தி.நகர் தொகுதி வளர்ச்சிப் பணிகள்: அனைத்துத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் என்.ஆனந்த் ஆலோசனை

தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்தும் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
என். ஆனந்த்
Published on

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் படி இன்று ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும், தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினருமான என். ஆனந்த் சென்னை தலைமை செயலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அறிவுரைகள்

இதில், தியாகராய நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவல்துறை, மின்சாரத்துறை, சென்னை மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் அனைத்து துறை அலுவலர்களையும் அழைத்து தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்தும் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தி பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்.

* பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்த வித பாதிப்பும் வரக்கூடாது.

* சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும்.

* தொகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

* தொகுதி முழுவதும் இரவு நேரங்களிலும் வெளிச்சம் உள்ள வகையில் தெரு விளக்குகள் அமைக்கப்பட வேண்டும்.

* இருள் இல்லாத பகுதியாக தியாகராய நகர் பகுதி முழுவதும் இருக்க வேண்டும்.

* பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

* குறிப்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* கஞ்சா போன்ற போதை வஸ்துக்களின் நடவடிக்கைகள் தொகுதியில் எங்குமே இருக்கக் கூடாது.

* டாஸ்மாக் கடைகள் சரியான நேரத்தில் மூடப்பட வேண்டும்.

* பள்ளிக்கூடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்.

* போக்குவரத்து நெரிசல் இல்லாமல் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.

* மக்களின் அத்தியாவசிய தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்.

* மின்சாரம், தண்ணீர், மருத்துவம், உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் அனைத்து எந்த பிரச்சனையும் இல்லாமல் பொதுமக்களுக்கு கிடைத்திட வேண்டும்.

* தெரு நாய்கள் பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை துணை ஆணையாளர் V.R. சீனிவாசன், இ.கா.ப., சிவில் சப்ளை உதவிஆணயாளர் அபிநயா, வட்டாட்சியர் D. வாணி. மின்துறை செயற்பொறியாளர் ஏ. வெங்கடேசன், பெருநகர சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் எம். கமலக்கண்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com