தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமாகாத விரக்தியில் தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள ஏ.கே.குச்சிப்பாளையம் பாடக சாலை தெருவை சேர்ந்தவர் சக்திவேல் மகன் ராஜ்குமார்(வயது 30). தையல் கடை நடத்தி வந்த இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியில் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com