வீட்டில் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டல்... 13 வயது மாணவியை கர்ப்பமாக்கிய குரூர வாலிபர்கள்

வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
வீட்டில் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டல்... 13 வயது மாணவியை கர்ப்பமாக்கிய குரூர வாலிபர்கள்
Published on

மடிப்பாக்கம்,

சென்னையை அடுத்த கீழ்க்கட்டளை பகுதியை சேர்ந்த 13 வயது மாணவி, அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி, தனக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியை எழும்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, மாணவி 9 வாரம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. அதை கேட்டு அவரது பெற்றோர் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மடிப்பாக்கம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் அந்த மாணவி, வீட்டின் குளியல் அறையில் குளிக்கும்போது, கீழ்க்கட்டளையை சேர்ந்த நிதிஷ் (19), அஜய் (19) ஆகிய 2 பேர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளனர்.

பின்னர் மாணவியிடம் அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததும், இதில் மாணவி கர்ப்பமானதும் தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமான நிதிஷ், அஜய் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com