சென்னை துறைமுக ஆணைய தலைவராக குர்வே சரத்சந்திரா பொறுப்பேற்பு

மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளுக்கு அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
சென்னை துறைமுக ஆணைய தலைவராக  குர்வே சரத்சந்திரா பொறுப்பேற்பு
Published on

சென்னை,

சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவராக குர்வே சச்சின் சரத்சந்திரா பொறுப்பேற்றுள்ளார். விஸ்வேஸ்வராயா தேசிய தொழில்நுட்ப நிறுவ னத்தில் எந்திரப் பொறியியல் பட்டம் பெற்ற இவர், 2003-ம் ஆண்டு உத்தரகாண்ட் கேடரைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது பணிக்காலத் தில், அவர், உத்தரகாண்ட் மற்றும் மராட்டிய மாநிலத்தில் பல முக்கிய நிர்வாக மற்றும் தலை மைப் பதவிகளை வகித்துள்ளார். சுற்றுலா, சிவில் விமானப் போக்குவரத்து, வருவாய் நிர்வாகம், ஊரக வளர்ச்சி, தொழில்கள், பொது நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளுக்கு அவர் குறிப்பிடத்தக்க பங்க ளிப்பை வழங்கியுள்ளார்.

சென்னை துறைமுகத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அவ ருக்கு. துறைமுக உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com