பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு: 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பெண்ணின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர்
பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு: 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ.பள்ளிப்பட்டிய சேர்ந்தவர் வெங்கடேசமணி. இவரது மனைவி முனியம்மாள் (வயது 36). இவர் அ.பள்ளிப்பட்டியில் உள்ள மருந்து கடையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று முனியம்மாள் மற்றும் மருந்து கடை உரிமையாளர் முருகேசன் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஒடசல்பட்டி அருகே சிந்தல்பாடி பிரிவு ரோடு அருகே வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் முனியம்மாளின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com