ஆண்டாள் குறித்த பேச்சு: புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்-கவிஞர் வைரமுத்து

ஆண்டாள் குறித்து நான் பேசிய கருத்துகள் யாரையும் புண் படுத்துவதற்காக அல்ல புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.#vairamuthu
ஆண்டாள் குறித்த பேச்சு: புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்-கவிஞர் வைரமுத்து
Published on

சென்னை

ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், வைரமுத்து கலந்து கொண்டு ஆண்டாள் பற்றி பல கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுளுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் அந்த விழாவிற்கு வந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே, இந்து மதத்தை அவமதித்துவிட்டதாக வைரமுத்திற்கு பாரதீய ஜந்தா எச் ராஜா உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள வைரமுத்து "தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று.

ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து. ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர்.

எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com