மின்சார ரெயிலாக புறப்பட்ட தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ்

பயண நேரம் 1 மணி நேரம் குறைய வாய்ப்புள்ளதால் தென் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மின்சார ரெயிலாக புறப்பட்ட தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ்
Published on: 

நெல்லை,

செங்கோட்டை-தாம்பரம்

செங்கோட்டை-தாம்பரம் இடையே வாரம் மும்முறை ரெயில் (வண்டி எண் 20683/20684) சேவை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ந்தேதி பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. தாம்பரம்-செங்கோட்டை ரெயில் (வண்டி எண் 20683) ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை களில் இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு 14 மணி நேர பயணமாக மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டையை வந்தடைகிறது.

மறுமார்க்கத்தில் செங்கோட்டை- தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (20684) திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் செங்கோட்டையில் மாலை 5.35 மணிக்கு புறப்பட்டு சேரன்மகாதேவி, கல்லிடை, அம்பை, கடையம், பாவூர்சத்திரம் வழியாக 12 மணி 50 நிமிடங்கள் பயணித்து மறுநாள் காலை 7.25 மணிக்கு தாம்பரத்தை சென்றடைகிறது.

முழுவதும் மின்சார என்ஜின்

தமிழ்நாட்டில் ரெயில்வே மின்மயமாக்கலில் கடைசி பகுதியாக இருந்த திருவாரூர்-பட்டுக் கோட்டை- காரைக்குடி ரெயில் வழித்தடம் மின்மயமாக்கல் பணிகள் 100 சதவீதம் முடிந்தது. இதனால் நேற்று தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் முழுவதும் மின்சார ரெயில் என்ஜின் கொண்டு இயக்கத்தை தொடங்கியது.

இதனால் திருவாரூரில் 20 நிமிடங்கள் ரெயில் என்ஜின் மாற்றுவதற்கான நேரம் தவிர்க்கப்படும். நெல்லைக்கு காலை 8.10 மணிக்கு வந்து சேரும் இந்த ரெயில் 9 மணி வரை செங்கோட்டை -நெல்லை பயணிகள் ரெயிலுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் இருந்து வந்தது. இனிமேல் இந்த ரெயில் நெல்லைக்கு காலை 7.45 மணிக்கு வந்துவிடும். 9.50 மணிக்கு செங்கோட்டையை சென்றடைய வாய்ப்புள்ளது.

1 மணி நேரம் குறையும்

மறுமார்க்கத்தில் செங்கோட்டை-தாம்பரம் எக்ஸ்பிரஸ் காலை 6.35 மணிக்குள் தாம்பரத்தை சென்றடையும். இதனால் இரு மார்க்கங்களிலும் பயண நேரம் 1 மணி நேரம் குறைய வாய்ப்புள்ளதால் தென் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ரெயில் பயணிகள் சங்க தலைவர் பாண்டியராஜா கூறுகை யில், "தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 6 பெட்டிகளை இணைப்ப தோடு தினசரி இயக்கவும் நடவடிக்கை

X

Daily Thanthi
www.dailythanthi.com