தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு
Published on

சென்னை

சென்னை வானிலை மையம் கூறி உள்ளதாவது:-

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது .சென்னையில் வானம் ப மேகமூட்டத்துடன் காணப்படும்.

வட கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 55 கிமீ வரை காற்று வீச கூடும்; மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடல் சீற்றம் காரணமாக இராமேஸ்வர மீனவர்கள் 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

வடஇந்தியாவில் பருவமழை விரைவில் தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகா , கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்துள்ளது. இந்நிலையில் வட இந்தியாவிலும் தென்மேற்கு பருவமழை பெய்யும் சூழல் பிரகாசமாக ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், ஓடிசா ஆகிய மாநிலங்களில் அதற்கான சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் விரைவில் மழை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், ஒடிசா, மேற்குவங்கம், தெற்கு குஜராத், ஜார்கண்ட், பீகார், மற்றும் மத்திய பிரதேசத்தில் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பருவமழைக்கு முன்னதாக ஜூன் 27ஆம் தேதி முதல் இடியுடன் கூடிய பருவமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல், உத்தரகாண்ட், மத்திய பிரேதேசம், சத்தீஷ்கர், ஜார்கண்ட், அசாம், மேகலாயா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் இடியுடன் மழை பெய்திருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. நாட்டின் மழை சதவீகிதம் இயல்பை விட 39 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது பருவமழை இந்தியாவின் மத்திய பகுதிக்கு நகர்ந்துள்ள நிலையில் மழையின் பற்றாக்குறை அளவு 70 சதவீதமாக இருக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com