தமிழ் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி

நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் தமிழ் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடந்தது.
தமிழ் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி
Published on

நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்டவருவாய் அலுவலர் ஷகிலா, உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் அருண்தம்புராஜ் பேசுகையில், தமிழ்நாடு முழுவதும் நமது மரபின் வளமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் செழுமையான பண்பாடுகளில், தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது.எனவே மாணவர்கள் அனைவரும் தமிழின் பெருமைகள் கேட்டறிந்தும், தமிழ் மொழியின் மரபுமற்றும் பண்பாடுகளை அறிந்தும் தமிழை வளர்த்து பெருமிதம் கொள்ளவேண்டும் என்றார். இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுபரப்புரை குறித்துகேள்வி கேட்கப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com