தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்தநாள்; அரசின் சார்பில் போற்றி வணங்குகிறேன்: மு.க.ஸ்டாலின் பதிவு

மண்ணோடு மண்ணாகப் போகவிருந்த பழந்தமிழ் இலக்கியங்களைச் சுவடிகளில் இருந்து அச்சுப்பதிப்பாகக் கொண்டு வந்தவர் ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா. என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்தநாள்; அரசின் சார்பில் போற்றி வணங்குகிறேன்: மு.க.ஸ்டாலின் பதிவு
Published on

‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்தநாள்!

மண்ணோடு மண்ணாகப் போகவிருந்த பழந்தமிழ் இலக்கியங்களைச் சுவடிகளில் இருந்து அச்சுப்பதிப்பாகக் கொண்டு வந்த ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா. அவர்களின் பிறந்தநாளில், மண்ணுக்கடியில் இருக்கும் தமிழரின் தொல் நாகரிகத்தை வெளிக்கொணரும் நமது திராவிட மாடல் அரசின் சார்பில் அவரைப் போற்றி வணங்குகிறேன்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com