மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு

வால்பாறை அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு நடந்தது.
மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு
Published on

பள்ளி கல்வித்துறை உத்தரவின் பேரில் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ -மாணவிகளுக்கு தமிழ் மொழியில் படிக்க பற்றும் ஆர்வமும் ஏற்படும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவ -மாணவிகளுக்கு தமிழ் மொழியில் படிக்க ஆர்வத்தையும், தமிழ் மொழியின் மீது ஒரு பற்றும், தமிழ் இலக்கியங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட வேண்டும் என்பதற்காக தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ -மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகையும் பள்ளி கல்வித்துறை சார்பில் வழங்கப்படுகிறது. வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழ் மொழி இலக்கிய திறனறி த்தேர்வில் 113 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமைஆசிரியர் சிவன்ராஜ் செய்திருந்தார். அட்டகட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் பாபு தேர்வு மைய அதிகாரியாக இருந்து கண்காணித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com