சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தமிழ்தான் நம்மை காப்பாற்றுகிறது. தமிழ்நாட்டுக்கு என்று தனிக்கொடியை உருவாக்க வேண்டும் என்றார்.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும்:  அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Published on: 

சென்னை

சி.பி.எஸ்.இ. உள்பட அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.

தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தில் இன்று கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, 1 முதல் 8-ம் வகுப்பு வரை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்றார்.

தனிக்கொடி

அவர் தொடர்ந்து, தாய்மொழியை விட்டுவிட்டு போனால், நமது தாயையே விட்டுவிட்டு போவதற்கு சமம். நமது மாநிலத்தின் அடித்தளம் தாய்மொழியான தமிழ் என்று கூறினார்.

நான் தமிழ்மொழியை காப்பாற்றவில்லை. தமிழ்தான் நம்மை காப்பாற்றுகிறது. தமிழ்நாட்டுக்கு என்று தனிக்கொடியை உருவாக்க வேண்டும். அந்த கொடியை நவம்பர் 1 மற்றும் ஜூலை 18-ந்தேதி முதல்-அமைச்சர் கையால் முதல்முறையாக ஏற்ற வேண்டும். தேசியக்கொடிக்கு இணையாக போற்றக்கூடிய ஒரு கொடியை தமிழகத்திற்கு உருவாக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம் என்றார்.

X