தமிழ் இலக்கிய பேரவை கூட்டம்

தூத்துக்குடி பள்ளியில் தமிழ் இலக்கிய பேரவை கூட்டம்
தமிழ் இலக்கிய பேரவை கூட்டம்
Published on

தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் தொடக்கப்பள்ளி வளாகத்தில் 257-வது தமிழ் இலக்கிய பேரவை கூட்டம் நடந்தது. பேரவை தலைவர் துரை கணேசன் தலைமை தாங்கினார். திருக்குறள் தனபாலன் முன்னிலை வகித்தார். மாணிக்கவாசகம் வரவேற்று பேசினார். ஆயிரம் தொழில் செய்வீர் என்ற தலைப்பில் முன்னாள் இலக்கிய பேரவை தலைவர் அல்பர்ட் பேசினார். 'அன்னவர்க்கே சரணங்களே' என்ற தலைப்பில் கோவில்பட்டி கம்பன் கழக செயலர் சரவணச்செல்வன் பேசினார். தமிழ் இலக்கிய பேரவை புரவலர் விநாயகமூர்த்தி தொகுப்புரை வழங்கினார்.

கூட்டத்தில் செய்யது முகமது ஷரீப் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆதி அருமைநாயகம் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com