

சென்னை,
கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி செயல்படுகிறது. இதனால், தமிழகத்தில் கொரொனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது.
இந்தநிலையில் 14-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் நடந்தது. தமிழகம் முழுவதும் 20 லட்சத்து 45 ஆயிரத்து 347 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதில் 6 லட்சத்து 81 ஆயிரத்து 346 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 13 லட்சத்து 64 ஆயிரத்து ஒருவரும் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர். இந்தத் தகவல்களை மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.