

சென்னை,
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை கடந்த 2-ந்தேதி இரவு 10 மணிக்குத்தான் மத்திய அரசு அறிவித்தது. அன்றைய தினம் நானும், உதயநிதி ஸ்டாலினும் கடலூருக்கு சென்று கொண்டிருந்தோம்.
மறுநாள் காலை 9 மணிக்கு திட்டக்குடி தொகுதியில் உள்ள பெண்ணாடம் என்ற ஊரில், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தோம். அதாவது, அறிவித்த 10 மணி நேரத்தில் தமிழகத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே கர்ப்பிணிகளுக்கு முதன்முதலில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது தமிழகத்தில்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.