தமிழக சட்டசபைக்கு 2 நாட்கள் விடுமுறை

24-ந்தேதி அன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடுகிறது.
தமிழக சட்டசபைக்கு 2 நாட்கள் விடுமுறை
Published on

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் தற்போது மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சட்டசபைக்கு இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை ஆகும். 24-ந்தேதி அன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடுகிறது.

அன்றைய தினம் நகராட்சி நிர்வாகம் மற் றும் குடிநீர் வழங்கல் துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை, எழுதுப்பொருள் மற்றும் அச்சுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி, உயர்கல்வித்துறை ஆகிய மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள் ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com