3 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று கூடுகிறது

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்ட மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
3 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
Published on

சென்னை,

3 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கூடுகிறது. காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுகிறார். அதனை தொடர்ந்து 2 துறைகளின் சார்பிலும் புதிய அறிவிப்புகளை அவர் வெளியிடுகிறார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்ட மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் பல துறை சார்ந்த சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட உள்ளது. இந்த நிகழ்வுகளுடன் சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com