

சென்னை
தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளன. இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொகுதி பகிர்வு தொடர்பாக பேச்சுவார்த்தைக்குழு அமைத்துள்ளது.
இதுபற்றி அக்கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு கூட்டம் எஸ். கலைச்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
எதிர்வரும் சட்டசபை தேர்தலில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், தி.மு.க. தலைமையோடு தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தை நடத்த மு. வீரபாண்டியன், (மாநில செயலாளர்) ரா.முத்தரசன், கே.சுப்பராயன் எம்.பி., கோ.பழனிசாமி ஆகிய 4 உறுப்பினர்கள் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு வருகிற 27-ந்தேதி முதல்கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் என தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.