தமிழக சட்டசபை தேர்தல்: முன்னிலை நிலவரம் -யாருக்கும் பெரும்பான்மை இல்லை

அதிக தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து அதிர வைத்து வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தல்: முன்னிலை நிலவரம் -யாருக்கும் பெரும்பான்மை இல்லை
Published on

சென்னை,

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிக தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து அதிர வைத்து வருகிறது.

தற்போது முன்னணி நிலவரங்கள் வெளியாகி வரும் நிலையில், எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை இல்லை என கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் இரு கட்சி வெற்றி பெற வேண்டும். தவெக 101 , அதிமுக 80, திமுக 52, மற்றவை -1 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 அமைச்சர்கள் பின்னடைவு சந்தித்துள்ளனர். 10 அமைச்சர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com