தமிழக சட்டசபை தேர்தல்; ஈரோட்டில் மத்திய மந்திரி அமித்ஷா தீவிர பிரசாரம்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட சிவகிரியில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
தமிழக சட்டசபை தேர்தல்; ஈரோட்டில் மத்திய மந்திரி அமித்ஷா தீவிர பிரசாரம்
Published on

சென்னை

தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து, தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதியை கடந்த மார்ச் 15-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்படுவதுடன், வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவித்தது.

இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளை முடித்து, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழகத்தில் 4 முனைப்போட்டி காணப்படுகிறது.

இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய மந்திரி பியூஷ் கோயல் உள்ளிட்டோர் ஏற்கனவே வாக்கு சேகரித்து சென்றுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள சூழலில், மத்திய மந்திரிகள் தமிழகத்திற்கு வருகை தந்து தங்களுடைய கூட்டணிக்கு ஆதரவாக தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட சிவகிரியில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். அவர் சிவகிரி அரசு மருத்துவமனை முதல் தீரன் சின்னமலை சிலை வரை சாலை வலம் செல்கிறார். அப்போது, மொடக்குறிச்சி பா.ஜ.க. வேட்பாளரான கிருத்திகாவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

இதனையடுத்து, கோவையில் இருந்து சென்னைக்கு வரும் அவர், மயிலாப்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அவர் இன்று ஒரே நாளில் மொடக்குறிச்சி, மயிலாப்பூர் ஆகிய இரு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com