தமிழக சட்டசபை தேர்தல்: தலைவர்கள் எங்கே ஓட்டுப்போடுகிறார்கள்?

தமிழகத்தின் 16-வது சட்டசபையை அமைப்பதற்கு, 234 தொகுதிகளில் இருந்து உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல்: தலைவர்கள் எங்கே ஓட்டுப்போடுகிறார்கள்?
Published on

கடந்த ஒரு மாதமாக ஓய்வில்லாமல் பிரசாரம் மேற்கொண்ட அரசியல் தலைவர்கள் எல்லாம் மக்களோடு மக்களாக வாக்களிக்க இருக்கின்றனர். எந்த அரசியல் கட்சி தலைவர்?, எத்தனை மணிக்கு?, எங்கே வாக்களிக்கப் போகிறார்கள்? என்ற விவரத்தை பார்ப்போம்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- காலை 7.45 மணி - நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சிலுவம்பாளையம்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- காலை 7.40 மணி - செவந்த் டே மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்:- காலை 8 மணி - எஸ்.ஐ.இ.டி. கல்லூரி, தேனாம்பேட்டை.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- காலை 7.30 மணி - ஸ்ரீ மரகதாம்பிகை ஆரம்பப் பள்ளி, மாரியம்மன் கோவில் தெரு, திண்டிவனம்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:- காலை 9.30 மணி - அரசு மேல்நிலைப்பள்ளி, கலிங்கப்பட்டி.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:- காலை 10 மணி - சென்னை மேல்நிலைப்பள்ளி, பீமன்ன கார்டன் தெரு, ஆழ்வார்பேட்டை.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:- காலை 9 மணி - ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கீரப்பாளையம், சிதம்பரம்.

பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன்:- காலை 7.05 மணி - சென்னை நடுநிலைப்பள்ளி, குஜ்ஜி தெரு, அண்ணாநகர் கிழக்கு.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:- காலை 7 மணி - காவேரி மேல்நிலைப்பள்ளி, சாலிகிராமம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:- காலை 7.30 மணி - நகராட்சி நடுநிலைப்பள்ளி, சிதம்பரம்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்:- காலை 8 மணி - அரசு தொடக்கப்பள்ளி, வேளூர் கிராமம், திருத்துறைப்பூண்டி.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:- காலை 8 மணி - அரசு ஆரம்பப் பள்ளி, அங்கனூர், அரியலூர் மாவட்டம்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:- காலை 8 மணி -அரசு மேல்நிலைப்பள்ளி, பாப்பான்சாவடி, காமராஜர் அவென்யூ 2-வது தெரு, அடையாறு.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்:- காலை 7 மணி - அரசு மேல்நிலைப்பள்ளி, ஆழ்வார்பேட்டை.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:- மதியம் 12 மணி - சென்னை நடுநிலைப்பள்ளி, தாமோதரபுரம், அடையாறு.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:- காலை 7.30 மணி - வேளாங்கன்னி பள்ளி, அஷ்டலெட்சுமி நகர், வளசரவாக்கம்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:- காலை 7.30 மணி - ஸ்ரீ மரகதாம்பிகை ஆரம்பப் பள்ளி, மாரியம்மன் கோவில் தெரு, திண்டிவனம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com