தமிழக சட்டசபை நாளை கூடுகிறது

தமிழக முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
தமிழக சட்டசபை நாளை கூடுகிறது
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய விஜய்யின் தவெக, பிற கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை காட்டியது. இதையடுத்து, நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விஜய்யுடன் மேலும் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

நாளை மற்ற எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிற அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். தற்போது தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன், தமிழக சட்டசபை நாளை கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 13-ந்தேதிக்குள் சட்டசபையில் தவெக, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டுள்ளார். சட்டசபையில் தவெக தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் என கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com