

சென்னை,
பாரா ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்று சாதனை படைத்திற்கும் தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஜப்பானில் நடைபெற்றுவரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 'மகளிருக்கான வலுதூக்குதல் 67 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவிற்காக வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனையர் கஸ்தூரி ராஜாமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் Elite Scheme திட்டத்தில் பயன்பெற்று வரும் கஸ்தூரி ராஜாமணி, தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்குத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத்தொகையினை (High Cash Incentive) பெறும் கஸ்தூரி ராஜாமணி, மேலும் பல உலக சாதனைகள் படைக்க எனது பாராட்டுகள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.