தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி பயணம்..!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி செல்கிறார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி பயணம்..!
Published on

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் அதிமுக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்டோபர் 3-ந்தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் பாஜக தேசிய தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசிக்க உள்ளார். இதற்காக நாளை அண்ணாமலை டெல்லி செல்கிறார். அதன்படி, கோவை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் அவர் டெல்லி செல்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com