தமிழக பட்ஜெட்: கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்த ரூ. 135 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில் கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்த ரூ. 135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்: கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்த ரூ. 135 கோடி நிதி ஒதுக்கீடு
Published on

சென்னை

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரை நிகழ்த்தினார்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்த ரூ. 135 கோடி நிதி ஒதுக்கீடு

* சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு

* தமிழக பட்ஜெட்டில் நீர்வளத்துறைக்கு ரூ.7,338.36 கோடி ஒதுக்கீடு. கடந்தாண்டை காட்டிலும் ரூ. 4, 296.35 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு

*நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 20, 400 கோடி நிதி ஒதுக்கீடு

* அணைகள் புனரமைப்பு, பாதுகாப்புக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு

* சமத்துவபுர வீடுகளை சீரமைக்க ரூ.190 கோடி நிதி ஒதுக்கீடு

* விளிம்புநிலை பழங்குடியின மக்களுக்கு 443 வீடுகள் கட்ட ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு

* மாற்றுத்திறனாளிகள் நலன் மேம்பாட்டிற்கு ரூ. 838 கோடி நிதி ஒதுக்கீடு

* ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.4281 கோடி நிதி ஒதுக்கீடு

* தரைப்பாலங்களை உயர்மட்ட மேம்பாலங்களாக மேம்படுத்த ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு

* தமிழக பட்ஜெட்டில் கால்நடை பராமரிப்பு துறைக்கு ரூ. 1,314 கோடி ஒதுக்கீடு

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com