ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக ஆகஸ்ட் 30-ந்தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக வரும் 30-ந்தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக ஆகஸ்ட் 30-ந்தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்
Published on

சென்னை,

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் விளையாடப்படும் ரம்மி, சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளில் பணத்தை இழந்து இளைஞர்கள் பலர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் பல இடங்களில் அரங்கேறியுள்ளன. இதனை தடுக்கும் விதமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

இதனையடுத்து ஆன்லைன் ரம்மி தடை தெடர்பாக, தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 30-ந்தேதி நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் கொண்டு வருவது, புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், துறை வாரியான அமைச்சர்களின் செயல்பாடுகள், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com