

சென்னை,
சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று மாலை 6 மணி அளவில் கூடுகிறது.
இதில் புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விவாதித்து ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.