

சென்னை,
தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 19- ஆம் தேதி கூடுகிறது. முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு பற்றி ஆலோசிக்கப்படலாம் எனத்தெரிகிறது. வெள்ள சேதம், நிவாரண நிதி உள்ளிட்டவை குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை செய்வார் என்று தெரிகிறது.